பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் முடியும் முன்பே, பணிநிரவல் கலந்தாய்வு நடத்துவதற்கு, ஆசிரியர்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு, ஜூன், 11ம் தேதியும்,
உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்களுக்கு, 12ம் தேதியும், பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்குகிறது. பதவி உயர்வு, பணி மாறுதல் உட்பட, அனைத்து கலந்தாய்வு நடைமுறைகளும், ஜூன், 21ம் தேதி வரை நடக்கிறது.பணி நிரவலை பொறுத்தவரை, கடந்தாண்டு ஜூன் மாத நிலவரப்படி, மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படவுள்ளது. தொடக்க கல்வித்துறையில், 6,௦௦௦க்கும் மேற்பட்டோர், பணிநிரவல் பட்டியலில் உள்ளனர். மாணவர் சேர்க்கை, ஆக., வரை நடப்பதால், இதற்கு பின், பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டுமென்ற, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர், அருளானந்தம் கூறுகையில், ''கடந்த கல்வியாண்டில், செப்., மாதம் நடத்தப்பட வேண்டிய, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கவில்லை. நடப்பு கல்வியாண்டுக்கும், இம்மாதமே கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆனால், ஆக., மாதம் வரை, மாணவர் சேர்க்கை நடக்கிறது. இச்சேர்க்கைக்கு பின் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, பணிநிரவல் செய்யப்பட வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக