லேபிள்கள்

7.6.18

இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை துவக்கம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, 42 உதவி மையங்களில், நாளை முதல், ஒரு வாரம் நடக்க உள்ளது.
அண்ணா பல்கலையின், 509 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜூலை முதல், ஒரு வாரம் நடக்க உள்ளது. கடந்த, 2017 வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் இருந்து, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்த கவுன்சிலிங்குக்கு, மே, 3 முதல், ஏப்., 2 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம், 1.59 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயார் செய்வதற்கான, 'ரேண்டம்' எண், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.ரேண்டம் எண், அனைத்து மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆகவும், இ - மெயிலிலும் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், நாளை முதல் அனைத்து மாணவர்களுக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு துவங்குகிறது.அண்ணா பல்கலை அமைத்துள்ள, 42 உதவி மையங்களுக்கு, மாணவர்கள் அல்லது பெற்றோர் சென்று, அசல் விண்ணப்பங்களை காட்ட வேண்டும். நாளை முதல், 14ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.ஒவ்வொரு மாணவரும், எப்போது சான்றிதழ் சரிபார்ப்பு மையத்துக்கு வர வேண்டும் என்ற, தேதி, நேரம், உதவி மையம் ஆகிய விபரங்கள், மாணவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும் இ - மெயிலில் அனுப்பப்படுகிறது.

மாணவர்கள், தமிழ்நாடு மாணவர் சேர்க்கை இணையதளத்தில், தங்கள் பயன்பாட்டாளர் குறியீட்டை பயன்படுத்தியும், சான்றிதழ் சரிபார்ப்பு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.அண்ணா பல்கலை குறிப்பிட்ட நாட்களில், அந்த மையங்களுக்கு செல்ல முடியாதவர்கள், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள உதவி மையத்திற்கு வந்து, 17ம் தேதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்ய வேண்டியது என்ன?
* சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும் மாணவர்கள், தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஆன்லைனில் இருந்து பிரதி எடுத்து, அதில் கையெழுத்திட்டு, உதவி மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்* 10ம் வகுப்பு சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 ஹால் டிக்கெட், மாற்று சான்றிதழான, டி.சி., - நிரந்தர ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்* தேவைப்படுவோர், இருப்பிட சான்றிதழ், இலங்கை அகதிகளுக்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு சான்றிதழ், மாற்று திறனாளர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் மற்றும் நகல் எடுத்து செல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக