அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழக்கம் போல, வரும் 30-ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தடையின்றி ஊதியம் கிடைக்க மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியல்களை சரி பார்த்து, அங்கீகரிக்கப்பட்டு அந்தந்த ஸ்டேட் பாங்க் மூலம் சென்னை தேசிய அனுமதி பிரிவுக்குச் சென்று, இறுதியாக ரிசர்வ் வங்கி மூலம் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
அதன்படி, கடந்த 27-ம் தேதி வரை பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைவருக்கும் 30-ம் தேதி ஊதியம் வழங்கப்படும். தேவையற்ற குழப்பம் அடைய வேண்டாம். இதுகுறித்து மேலும் விளக்கம் பெற விரும்புவோர்,
கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம், கடலூர் என்ற முகவரியில் நேரிலோ, அல்லது 94439 48802, 90037 29874 எனற செல்போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக