லேபிள்கள்

2.10.13

10 ம்வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்க தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

மார்ச்சில், 10ம்வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், அதற்கான செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, இன்று முதல் அக்.,15 வரை விண்ணப்பிக்கலாம்,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.


அடுத்தாண்டு மார்ச்சில் நடக்க உள்ள 10 ம் வகுப்பு தேர்வில், அறிவியல் பாடத்தை மட்டும் எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நேரடியாக 10 ம் வகுப்பு தேர்வு எழுத விரும்புவோர், அதற்கான செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க, ஜூன் 30 க்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்க தவறியோர், மீண்டும் வாய்ப்பளிக்குமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவ்வகுப்பில் பங்கேற்க, இன்று முதல் அக்.,15 வரை விண்ணப்பிக்க, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, http://dge.tn.gov.in, www.tndge.in ஆகிய இணையதளங்களில் இருந்து, பதிவிறக்கம் செய்து, நிரப்ப வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், மாவட்ட கல்வி அதிகாரி பெயரில், 125 ரூபாய்க்கு "டிடி'எடுத்து, இரு விண்ணப்பத்துடன் , அக்.,15 க்குள், மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 5 நாள் செய்முறை பயிற்சி வகுப்புகள், ஜனவரியில் நடைபெறும். அதற்கான இடம், தேதி பின்னர் தெரிவிக்கப்படும். அவ்வகுப்பில், 80 சதவீதம் வருகை பதிவு இருக்க வேண்டும். அந்த மாணவர்கள் மட்டுமே மார்ச்சில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். செய்முறைத்தேர்வு 25 மதிப்பெண்ணுக்கும், எழுத்துத்தேர்வு 75 மதிப்பெண்ணுக்கும் நடத்தப்படும். செய்முறைத்தேர்வில் கண்டிப்பாக 15 மதிப்பெண் பெறவேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக