முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை காலை ஆலோசனை நடத்துகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்,
2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித் தேர்வை நடத்தியது.
1.67 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை,
33,237 பேர் எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., தயாரான நிலையில், தமிழ்பாட கேள்வித்தாளில், 47 கேள்விகள், பிழையுடன் இருந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர், உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய தமிழ் பாட தேர்வை, ரத்து செய்து, புதிதாக, வேறு தேர்வை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக