லேபிள்கள்

30.9.13

கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு வினோத இடமாறுதல் உத்தரவு

அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வினோதமான முறையில், இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.

கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளில், இடம் மாறுதல் செய்யப்படும் ஆசிரியர், தற்போது பணியாற்றும் பள்ளியில் 2 நாட்களும், இடமாறுதல் பெற்றுச் செல்லும் பள்ளியில் 3 நாட்களும் பணியாற்ற, உத்தரவு வழங்கப்படுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு அலைச்சலும், மாணவர்களுக்கு கல்வி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறையால் தான், கள்ளர் சீரமைப்புத் துறை, இந்த விநோத உத்தரவை பிறப்பித்திருப்பதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக