தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாள்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து அவர்களுக்கான பதவி உயர்வு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பதவி உயர்வுக்குத் தகுதியானவர்களின் பட்டியல், காலிப்பணியிடங்கள் விவரம் போன்றவை தயாராக உள்ளன. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் பதவி உயர்வு மற்றும் பணியிடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகவோ, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவோ பதவி உயர்வு பெறலாம். பதவி உயர்வு பெற்றவர்கள் தலைமையாசிரியராகவோ, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகவோ இடமாறுதல் பெறலாம் என்ற நடைமுறை இருந்து வந்தது. ஆனால், இந்த நடைமுறையை பள்ளிக் கல்வித் துறை மாற்றியது. பதவி உயர்வுக்குப் பிறகு அவர்கள் இடமாறுதல் பெறமுடியாது எனவும், அவர்கள் தேர்ந்தெடுத்த பொறுப்புகளில் இருந்தே அடுத்தடுத்த பதவி உயர்வு இருக்கும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இதை எதிர்த்து பட்டதாரி ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். பல மாதங்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் ஏற்கெனவே இருந்த நடைமுறையே பின்பற்றப்படும் என பள்ளிக் கல்வித் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்தது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களாக இருந்த 60-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இந்த இடமாற்றத்துடன் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
middle school B.T's.P.G how will going
பதிலளிநீக்குmiddle school B.T's.P.G case how will going
பதிலளிநீக்கு