லேபிள்கள்

15.12.13

தகவலை தாமதமாக தெரிவித்த அதிகாரிகள் : தலைமை ஆசிரியர் கவுன்சலிங்கில் குழப்பம்

உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான கவுன்சலிங் நேற்று காலை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் ஆன் லைன் மூலம் தொடங்கியது
சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு இந்த கவுன்சலிங் நடத்துவது தொடர்பாக பள்ளி கல்வி துறையில் இருந்து நேற்று காலை 7மணி வரை எந்த தகவலும் வரவில்லை. பின்னர் தாமதமாக வந்தது. தொலைபேசி மூலம் சம்பந்தபட்ட ஆசிரியர்களை அழைத்து கவுன்சலிங்கில் கலந்து கொள்ள சொல்லி அழைத்தனர். இதனால் காலை 9மணிக்கு தொடங்க வேண்டிய ஆன்லைன் கவுன்சலிங் பல இடங்களில் தாமதமாக தொடங்கியது.முதல்கட்டமாக வட்டார வளமைய கண்காணிப்பாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் தொடங்கியது. மொத்தமாக நேற்று தமிழகம் முழுவதும் இருந்து 260 பேர் அந்தந்த மாவட்டங்களில் கலந்து கொண்டனர். அதற்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் தொடர்பாக 248 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். 
இந்த 508 பேருக்கு ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நேற்று 7மணியை கடந்தும் நடந்தது. இதற்கு பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் பதவி உயர்வு வழங்குதல் கவுன்சலிங் எப்போது நடக்கும் என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் இருந்தனர். 

பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை பதவி உயர்வு வழங்கும் போது 10 நாட்களுக்கு முன்பாகவே தகுதி பட்டியல் வெளியிடுவார்கள். கடந்த ஆண்டுகளில் நடந்த கவுன்சலிங்களில் தகுதி பட்டியல் வெளியிட்ட பின்பு தான் கவுன்சலிங் நடந்தது. ஆனால் இந்த முறை தகுதி பட்டியல் வெளியிடாமலே இந்த கவுன்சலிங் நேற்று நடத்தப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டில் இதுபோன்று கவுன்சலிங் நடத்தப்பட்ட போது 20ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் நடத்தி முடித்தனர். ஆனால் நேற்று நடந்த இந்த கவுன்சலிங் மட்டும் ஏன் குழப்பமாகவும், தாமதமாகவும், அவசரமாக நடந்தது. இது குறித்து ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக