பள்ளிக்
கல்வித் துறையின்
அவசர பதவி
உயர்வு "கவுன்சிலிங்'கை,
ஆசிரியர்கள் பலர்
வெறுத்து, "தற்காலிகமாக
வேண்டாம்' என
பதில் கொடுத்துள்ளனர்.
உயர்நிலைப்
பள்ளி தலைமையாசிரியர்
பதவி உயர்வுக்காக,
பணிமூப்பு பட்டியலில்
உள்ள பட்டதாரிகள்,
தமிழாசிரியர்கள் மற்றும்
உதவித் தொடக்கக்
கல்வி அலுவலர்களுக்கு
டிச., 14ல்
"கவுன்சிலிங்' நடந்தது.
இதற்கிடையே,
அனைவருக்கும் கல்வி
(எஸ்.எஸ்.ஏ.,)
திட்ட மேற்பார்வையாளர்கள்,
அப்பணியில் இருந்து
உயர்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர்கள் பணியிட
மாறுதலுக்கான "கவுன்சிலிங்'கும்
ஒரே நேரத்தில்
நடத்தப்பட்டது.
இதனால்,
எஸ்.எஸ்.ஏ.,
மேற்பார்வையாளர்கள் பலருக்கு,
உயர்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர் வாய்ப்பு
கிடைத்ததால், பட்டதாரி,
தமிழாசிரியர் மற்றும்
உதவித் தொடக்கக்
கல்வி அலுவலர்கள்
விரும்பிய இடங்கள்
கிடைக்கவில்லை. தூரத்தில்
உள்ள மாவட்டங்களில்
மட்டுமே பணியிட
வாய்ப்பு கிடைத்தன.
இதனால்,
248 இடங்களுக்கு நடந்த
"கவுன்சிலிங்'கில்,
"பேனலில்' இருந்து
அழைக்கப்பட்ட 156 ஆசிரியர்கள்
வரை, "பதவி
உயர்வு தற்காலிகமாக
வேண்டாம். தற்போதுள்ள
இடத்திலேயே தொடர்ந்து
பணியாற்றுகிறேன்,' என,
எழுதிக்கொடுத்துள்ளனர். இதில்,
பெரும்பாலும் ஆசிரியைகள்.
குடும்பச் சூழ்நிலை,
அவசர அழைப்பு,
தொலைதூர இட
வாய்ப்பு போன்ற
காரணங்களால் "கவுன்சிலிங்'கை
வெறுத்ததாக சர்ச்சை
எழுந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக