லேபிள்கள்

19.12.13

விளையாட்டுக்கு அரசு அறிவித்த 10 கோடி நிதி வந்து சேரவில்லை - பள்ளி மாணவர்கள் சோகம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கென விளையாட்டுப் போட்டிகள் நடத்த 10 கோடி நிதி ஒதுக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.
ஆனால் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.இதுகுறித்து பள்ளிகளின் விளையாட்டு துறையினர் கூறுகையில், மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்காக குறுவட்டம், மாவட்டம், மண்டலப் போட்டிகள் வரை நிதியே இல்லாமல் சொந்தப் பணத்திலும், பிறரிடம் வசூலித்தும் நடத்தி முடித்து விட்டோம். அரசு அறிவித்த நிதி வந்து சேரவில்லை. விளையா ட்டுக்கான பொது நிதியும் இல்லை. தனியார் அமைப்புகளை அணுகி நிதி கேட்டாலும், அரசு நிதி அறிவிப்பு செய்துள்ள நிலையில் நாங்கள் எப்படி தரமுடியும் எனக் கேட்கின்றனர். எனவே அடுத்து மாநிலப் போட்டிகளுக்கு மாணவர்களை எப்படி அழைத்துச் செல்வது எனத்தெரியாமல் தவித்து வருகிறோம் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக