லேபிள்கள்

16.12.13

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் : கவுன்சலிங் மூலம் 400 பேர் நியமனம்

உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக இரண்டு நாட்களாக நடந்த கவுன்சலிங்கில் 409 பேர் நியமனம் பெற்றனர்.
உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 400 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 14ம் தேதி ஆன்லைன் மூலம் நடந்தது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஆன்லைன் கவுன்சலிங் நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது.சில மாவட்டங்களில் இந்த கவுன்சலிங் குறித்த தகவல் தாமதமாக ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டதால் கவுன்சலிங் நடப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரே நாளில் நடந்து முடிய வேண்டிய கவுன்சலிங் இரண்டு நாட்கள் நடந்தது. 

இந்த கவுன்சலிங்கில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களை அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் வழங்க முடிவு  செய்யப்பட்டது. இதன்படி 278 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்றனர்.தவிரவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் வழங்கப்படும் கவுன்சலிங்கில் 131 பட்டதாரி ஆசிரியர்கள், உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி பெற்றனர்.

2 கருத்துகள்: