லேபிள்கள்

17.12.13

இப்படியும் ஏமாத்துறாங்க மாணவர்களே ஜாக்கிரதை

திருப்பூரில் உள்ள சில கம்ப்யூட்டர் சென்டர்களில் இருந்து, "ஸ்காலர்ஷிப்' தருவதாக, பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது. அதை நம்பி வரும் மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைகின்றனர்.

திருப்பூரில் கம்ப்யூட்டர் சென்டர்கள் ஏராளமாக செயல்படுகின்றன. இம்மையங்களில் பயிற்சி பெற மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். சில மையங்களில் இருந்து, மாணவ, மாணவியரின் பெற்றோர் மொபைல் எண்ணுக்கு அழைப்பு வருகிறது.

அதில், கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்குவதாகவும், இரண்டு புகைப்படங்கள் மற்றும் 100 ரூபாயுடன் நேரில் வரவும் என அழைக்கப்படுகிறது. உடனடியாக, அந்த மாணவர் அல்லது மாணவி, தனது பெற்றோருடன் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மையத்துக்கு நேரில் வருகின்றனர்.
அவர்களிடம், "5,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய கம்ப்யூட்டர் பயிற்சி,  சலுகையாக 1,000 ரூபாய்க்கு கற்றுத்தரப்படுகிறது; எங்கள் மையத்தில் பயிற்சியில் சேருங்கள்,' என, வலியுறுத்தப்படுகிறது. அவர்கள் சொல்வதை நம்பி, சில பெற்றோர், தங்களது பிள்ளைகளை பணம் செலுத்தி, பயிற்சியில் சேர்த்து விடுகின்றனர்; சிலர் மறுத்துவிட்டு திரும்பி செல்கின்றனர்.

மொபைல் போன் நிறுவனங்களில், மொத்தமாக போன் எண்களை பெறும் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் சில, அவர்களின் லாபத்துக்காக, "ஸ்காலர்ஷிப்' தருவதாக கூறி மாணவ, மாணவியரை ஏமாற்றுகின்றன.
கிராமப்புறங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரில் போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களை குறிவைத்து, இவ்வாறு ஏமாற்றுகின்றனர். சில நாட்களுக்கு முன், ஒரு கம்ப்யூட்டர் மையத்துக்கு மங்கலம் பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோருடன் வந்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
எனவே, இதுபோன்ற மோசடியில் இருந்து தப்பிக்க, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். "ஸ்காலர்ஷிப்' தருவதாக கூறி, ஏமாற்றும் கம்ப்யூட்டர் மையங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும், இரண்டு புகைப்படங்கள்  மற்றும் 100 ரூபாயுடன் நேரில் வரவும் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு கிராமப்புறங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரில் போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களை குறிவைத்து ஏமாற்றுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக