தொடக்கக் கல்வித் துறையில் புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்டபள்ளிகளில் உருவாக்கப்பட்ட பணியிடங்கள் 'அவசர கவுன்சிலிங்'மூலம் நிரப்பப்பட்டதால் 300 பணியிடங்கள் காலியாகஉள்ளன.தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 128 தொடக்கபள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் புதியபணியிடங்களுக்கு பணிமாறுதல் மற்றும் நியமனம் தொடர்பான'கவுன்சிலிங்' ஜன., 31ல் நடந்தது.
அதேபோல தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில்உருவாக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பியதன் மூலம் பழையஇடங்களில் இருந்து பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் 42பணியிடங்களும் காலியாகி உள்ளன. இவற்றை நிரப்ப இதுவரைஎந்த வழிமுறைகளும் தொடக்க கல்வித் துறை சார்பில்தெரிவிக்கப்படவில்லை. திட்டமிடல் இன்றி நடந்த 'அவசரகவுன்சிலிங்' மூலம் தேவையின்றி சுமார் 300 காலிப் பணியிடங்கள்ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள்கூறியதாவது:இப்பணியிடங்களுக்கு பொது 'கவுன்சிலிங்' போல்முன்கூட்டி அறிவிப்பு செய்து நடத்தியிருந்தால் ஆசிரியர்கள் பயன்அடைந்திருப்பர். தற்போது ஏற்பட்டுள்ள 300 பணியிடங்களைஎவ்வாறு நிரப்பப்படும் என்பது 'சஸ்பென்ஸாக' உள்ளது என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக