அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிக்கூடம் திறக்கும் போதுவிநியோகம் அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.
அன்று 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்குவிலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
அரையாண்டு தேர்வு முடிந்து இப்போது விடுமுறை நடைபெற்று வருகிறது. விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படுகின்றன. அன்றே பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன.இதற்காக தமிழ்நாடு பாட நூல் நிறுவன நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் அனைத்து மாவட்டங்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார்.திட்டமிட்டபடி பாடப்புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறந்த 2-ந்தேதி காலையிலேயே வழங்கப்படும் என்றும் மொத்தம் 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக