சுயநிதி தனியார் பலதொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு (பாலிடெக்னிக்) ஆண்டுக் கட்டணத்தை நிர்ணயித்து, அதற்கான குழு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கல்விக் கட்டணம் நிகழ் கல்வியாண்டு (2015-16), அடுத்த கல்வியாண்டுகளுக்கு (2016-17) பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்திலுள்ள சுயநிதி தனியார் பலதொழில்நுட்பக் கல்லூரிகள், ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்துள்ளது. இந்தக் குழுவானது பல்வேறு காலகட்டங்களில் கூடி, கல்லூரிகள்அளித்த விவரங்கள், ஆய்வுக் குழு சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கை, கல்லூரி நிர்வாகத்தின் கருத்துகள் ஆகியவற்றை ஆராய்ந்து கட்டணத்தை நிர்ண
சுயநிதி தனியார் பலதொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு (பாலிடெக்னிக்) ஆண்டுக் கட்டணத்தை நிர்ணயித்து, அதற்கான குழு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கல்விக் கட்டணம் நிகழ் கல்வியாண்டு (2015-16), அடுத்த கல்வியாண்டுகளுக்கு (2016-17) பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்திலுள்ள சுயநிதி தனியார் பலதொழில்நுட்பக் கல்லூரிகள், ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்துள்ளது. இந்தக் குழுவானது பல்வேறு காலகட்டங்களில் கூடி, கல்லூரிகள்அளித்த விவரங்கள், ஆய்வுக் குழு சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கை, கல்லூரி நிர்வாகத்தின் கருத்துகள் ஆகியவற்றை ஆராய்ந்து கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.கட்டணம் எவ்வளவு? பலதொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒரு மாணவருக்கு, ஒரு பருவத்துக்கு (செமஸ்டர்) குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகை என்பது கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், சிறப்புக் கட்டணம், ஆய்வுக்கூடம், கணினி, இணையதள சேவை, விளையாட்டு, பணியிட வாய்ப்பு-பயிற்சி, பராமரிப்பு, அடிப்படை வசதிகள் செய்தல்ஆகியவற்றுக்கான கட்டணங்களை உள்ளடக்கியது. ஹோட்டல் மேலாண்மை- கேட்டரிங் தொழில்நுட்பப் படிப்புக்கு ஒரு பருவத்துக்கான (செமஸ்டர்) கட்டணமாக ரூ. 25ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டிப்புக்கு ஒரு பருவத்துக்கான (செமஸ்டர்) கட்டணமாக ரூ. 25ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக