காஞ்சிபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியின் வளாகம் அண்மைக் காலமாக அப்பகுதி மக்களின் மாட்டுத் தொழுவமாக மாறி வருகிறது. இந்நிலையைப் போக்க பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபு
ரம் அருகே காலூர் ஊராட்சிக்கு உள்பட்டது பெரிய நத்தம் கிராமம். இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய உயர் நிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் காலூர், பெரிய நத்தம், குருவிமலை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 99 மாணவர்கள் 94 மாணவிகள் என மொத்தம் 193 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி கடந்த 2007-ஆம் ஆண்டு நடுப்பள்ளி தரத்தில் இருந்து உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி அருகே 2 ஏக்கர் நிலத்தில் 3,960 சதுரஅடி பரப்பளவில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், ஆசிரியர் ஓய்வு அறைகள் கட்டப்பட்டன.
புதிதாகக் கட்டடங்கள் கட்டியபோதே, சுற்றுச்சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் அந்தப் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் சமீப காலமாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் அப்பகுதி மக்கள் தங்களது கால்நடைகளை பள்ளி வளாகத்திற்குள் விட்டு செல்கின்றனர். கால்நடைகள் பள்ளி வளாகத்தில் மேய்ந்துவிட்டு அங்கேயே தங்கி விடுகின்றன. சிலர் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தங்கள் கால்நடைகளை கட்டிப்போட்டு விட்டு செல்வதால், ஆழ்துளைக் கிணறும் சரிந்து விடும் நிலை உள்ளது.
அதுபோல இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தை மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியது:
பள்ளியில் மாணவர், மாணவிகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை. இதனால் திறந்த வெளிப் பகுதியையே இரு பாலரும் பயன்படுத்தும் நிலை உள்ளது.
மேலும் பள்ளிக்குப் பின்புறம் வயல்வெளி உள்ளதால் அங்கிருந்து விஷ
சந்துகள் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து விடுகின்றன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக