லேபிள்கள்

9.4.15

18-இல் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்குகிறது.இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் 2 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி.
பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 10-ஆம் தேதி வரை இத்தேர்வு நடைபெறுகிறது. 
இந்தத் தேர்வை ஈரோடு மாவட்டத்தில் 31 ஆயிரத்து 215 மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இதன்விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்குகிறது.ஈரோடு மாவட்டத்தில் 2 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது. ஈரோடு கல்வி மாவட்டத்தில் ரங்கம்பாளையத்தில் உள்ள கொங்கு கல்வி நிலையத்திலும், கோபி கல்வி மாவட்டத்தில் கோபி, குருகுலம் மெட்ரிக் பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது.இதையொட்டி, இரு பள்ளிகளிலும் விடைத்தாள்கள் திருத்தும் நாள்களில், விடைத்தாள்திருத்தும் ஆசிரியர்கள் தவிர வேறு யாரும் செல்லக்கூடாது என கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், இரு பள்ளிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக