பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால், இந்த ஆண்டு நூற்றுக்கு நூறு, 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில், நேற்று அறிவியல் தேர்வு நடந்தது. இதில் மொத்தம், 75 மதிப்பெண்களுக்கு, 'சாய்ஸ்' உட்பட, 53 வினாக்கள் இடம் பெற்றன; இரண்டு 'டயாக்ராம்' வினாக்களுடன், பல சுவாரஸ்யமான வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நீர்த்தட்டுப்பாடு ஏற்படக் காரணம்; நீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கும் முறை; கிராமங்களில் அதிகம் பரவிய மற்றும் பெரும்பாலான மக்களை தாக்கிய நோய் எது என்று எலிக்காய்ச்சல், டெங்கு மற்றும் சிக்குன் குனியா கஒடஉகஅகபஅபடஅடஇரஉநஅதன; ஆதி மனிதன் தோன்றிய நாடு எது; கருப்பு வைரம் எது; மலேரியா கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் போன்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தேர்வு முடிந்து வந்த மாணவ, மாணவியர் கூறுகையில், 'வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது; அனைத்துக் கேள்விகளும் விடைகள் தெரிந்தவையாகவே இருந்தன; பரீட்சைக்கு முறையாக தயாரான, பெரும்பாலான மாணவ, மாணவியர் சென்டம் வாங்குவோம்' என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், 'அறிவியல் தேர்வு வினாத்தாள், 'ஈசி'யாக இருந்தது; ஏற்கனவே, கணித வினாத்தாளும் எளிதாக இருந்ததால், இரு பாடத்திலும் அதிக மாணவர்கள், முழு மதிப்பெண் பெறுவர். இதனால், வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் சேர போட்டி ஏற்படும்' என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக