அன்னுார் ஒன்றியத்தில், ஏப்ரல் 8ம் தேதியாகியும், மார்ச் மாத சம்பளம் வழங்கப்படாததால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.அன்னுார் தாலுகா அமைக்கப்பட்டு, இரண்டரை ஆண்டு ஆகி விட்டது. ஆனால், இதுவரை கருவூலம் ஏற்படுத்தப்படவில்லை.
மேட்டுப்பாளையம் தாலுகா கருவூலத்தில்தான் அன்னுார் தாலுகாவை சேர்ந்த ஊழியர்களின் சம்பள பட்டியல்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாதம்முதல் 'இபே' முறை செயல்படுத்தப்படுகிறது. அன்னுார் ஒன்றியத்தில், 75 துவக்கப்பள்ளிகளும், 15 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. 270 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.மார்ச் மாத சம்பளத்திற்கான பட்டியல், உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து, மேட்டுப்பாளையம், கருவூலத்திற்கு அனுப்பி, ஒரு வாரமாகி விட்டது. ஆனால், 8ம் தேதி வரை சம்பளம் வழங்கப்படவில்லை. கருவூலத்தில்விசாரித்தால், எப்போது சம்பளம் வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க மறுக்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக