லேபிள்கள்

7.4.15

முன்னுரிமை பட்டியல் தயாரிப்பில் ஏன் இந்த முரண்பாடு? -மாநில பொதுச்செயலாளர்

Patric Raymond Tngtf
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் போது, இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி
ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய காலத்தையும் கருத்தில் கொண்டு பதவி உய்ர்வு வழங்க வேண்டும் என்றும் அத்ற்கு ஆதாரமாக CEO க்கள் கூட்டத்தில் பேசப்பட்ட ஒரு கருத்தை ந.க எண் 61356/EDT/89 நாள் 14.12.92 ஐ காட்டி சிலர் பேசி வருவது மிகுந்த நகைப்பிற்கு உரியது.

அந்த செயல்முறைக் கடிதம்1.1.92 க்கான முன்னுரிமைப்பட்டியல் தயாரிப்பதற்கானது என்றும் இன்றைய நடமுறைக்கு அது பொறுந்தாது என்றும் ஏனொ புரியவில்லை.

இன்றைய நிலையில்நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கான பதவி உய்ர்வு அரசாணை எண்166 நாள்07.06.99 ன் படி வழங்க்கப்ப்டுகிறது என்பதும், ஊட்டுப்பதவியில் (தொடக்க பள்ளி த்லைமை ஆசிரியர் /தமிழாசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்) சேர்ந்த நாளின் அடிப்படையில் வழங்க்கப்படுகிற்து என்பதும் அரசாணையில் தெளிவாக குறிப்பிட பிறகும் இப்படி பேசுவது யாரை ஏமாற்ற..

இதே நபர்கள் சில ஆண்டுகளுக்கு முன்இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய காலத்தையும் கருத்தில் கொண்டு பதவி உய்ர்வு வழங்க வேண்டும் என்றும் அத்ற்கு அரசாணை எண் 400 நாள் 25.05.95 ஐ அமல் படுத்த் வேண்டும் என்று மாவட்ட தலை நகரங்க்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது ந.க எண் 61356/EDT/89 நாள் 14.12.92 ஞாபகம் வரவில்லையா? அரசாணை 400 ஐ மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்பதை ஆராய மாநில செயற்குழுவில் ஒரு குழு அமைத்தது ஏன் என்பதும் இதுதான் முற்போக்கு சிந்தனையா என்பதும் எனக்கு புலபட வில்லை,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக