லேபிள்கள்

15.7.15

தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பார்வை குறைபாடுள்ள 33 பேருக்கு ஆசிரியர் பணி

பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவு: ஆசிரியர் தேர்வு வாரியத் தகுதித்தேர்வில் 83 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களின் தேர்ச்சி குறித்து ஐகோர்ட் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பாணை மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

90 மற்றும் அதற்கு  மேல் மதிப்பெண்கள் பெற்ற 33 பார்வை குறைப்பாடுடைய மாற்றுத்திறனாளிகள் பட்டியல் தற்போது பெறப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள பார்வை  குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளை அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலி பணியிடங்களில் பெற்றோர் ஆசிரியர்  கழகம் மூலம் நியமனம் செய்ய வேண்டும்.

மேலும் மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரிகள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்,  சிறப்பாசிரியர்கள் காலி பணியிடங்களில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் செய்ய வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக