ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், சமீபகாலமாக ஆபாச படங்கள் பார்த்தல், மது அருந்துதல், ஆசிரியர்களை மிரட்டுதல் போன்ற பல்வேறு புகார்கள் மாணவர்களின் மீது பதிவு செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவங்கள் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.இதை தொடர்ந்து, மாணவர்களுக்கு மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள், எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், வளர் இளம் பருவத்தில் ரீதியான உடல் மனரீதியான மாற்றங்கள் குறித்து, இறை வணக்க கூட்டங்களிலும், நீதிபோதனை வகுப்புகளிலும் தொடர்ந்து விளக்கங்கள் அளித்து நல்வழிப்படுத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், இதுகுறித்த சுற்றறிக்கை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து மாணவர்களின் நடவடிக்கைகளை இருதரப்பினரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக