தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்க வரும் நவம்பர் 11-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில்வரும் நவம்பர் 11-ம் தேதி சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக நாள் கணக்கில் தீர்க்கப்படாமல் உள்ள புகார்கள் மற்றும் குறைகளுக்கு தீர்வு காணப்படும்.
எனவே, இந்த சிறப்பு முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் தங்களுடைய பெயர், வைப்புக் கணக்கு எண், புகார் குறித்த விவரம் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரியிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக