லேபிள்கள்

31.10.15

பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு நவ., 2ல் வெளியீடு

தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள், நவ., 2ல் வெளியாகின்றன.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 



செப்டம்பரில் நடந்த தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், நவ., 2 மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.தேர்வர்கள், http:/dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், நவ., 4 முதல், 6 வரை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்துக்கு நேரில் சென்று, 'ஆன்லைனில்' உரிய கட்டணத்துடன் பதிவு செய்ய வேண்டும். அந்த ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில்உள்ள விண்ணப்ப எண் அடிப்படையில் தான், மறுகூட்டல் முடிவு வெளியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக