லேபிள்கள்

28.10.15

காலவரையற்ற போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்?

காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், அரசு ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒருங்கிணைந்த பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும், ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. இறுதியாக, அக்., 8 ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், அரசு தரப்பில் போதிய நடவடிக்கைகள் இல்லாததால், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட, ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால், பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லிங்கம் கூறுகையில், ''பள்ளி வேலைநாட்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது, மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும். ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். உடனடியாக, அரசு தலையிட்டு இச்சூழலை மாற்ற வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக