லேபிள்கள்

26.10.15

பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு?

வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அரசு அறிவிப்பு வெளியிடவில்லையென்றால் குடும்பத்தோடு
உண்ணாவிரதம் இருப்பது என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.


தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் மாநில செயற்குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்டச் செயலர் ஆதி கேசவன் தலைமை தாங்கினார்.மாநிலத் தலைவர் முருகதாஸ், நிறுவனத் தலைவர் சுந்தர் கணேஷ் பெரியசாமி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு எஸ்.சி., - எஸ்.டி., ஆசிரியர் மற்றும் அலுவலர் நல சங்கத் தலைவர் அழகப்பன், ஜான் பிரிட்டோ, வெங்கடேசன் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அறிவிப்பு வரவில்லையென்றால் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களும் முதல் கட்டமாக குடும்பத்தோடு உண்ணாவிரத போராட்டமும், அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக