லேபிள்கள்

31.10.15

ஆய்வு கூட்டத்தில் அவதூறாக பேசிய அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கண்டித்து தலைமை ஆசிரியர்கள் வெளிநடப்பு

செய்யாறு தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி
முன்னேற்றம்குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் குறித்து புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டு வந்தார். 


கூட்டம் மாலை வரை நடைபெற்றது. அப்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாநில திட்ட அதிகாரியை கண்டித்து குரல் எழுப்பியபடியே கூட்ட அரங்கைவிட்டு வெளியேறினர். இதுகுறித்து, நிருபர்களிடம் தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகள் ஆலோசனை செய்யாமல் கொச்சையாக ஒருமையில் பேசினால் எவ்வளவு நேரம் பொறுத்துக்கொள்ள முடியும். மாநில அதிகாரிகள் இப்படி தரக்குறைவாக நடத்தினால் கல்வித்துறையிலும் டார்ச்சர் தாங்காமல் தற்கொலைகள் தான் நடக்கும். இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக