திருப்புவனம், மானாமதுரை உள்பட 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (அக். 27) நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, காளையார்கோவில், திருப்பத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக