லேபிள்கள்

25.10.15

லேப்- - டாப் பெற்ற மாணவர்களின் விவரங்களை கேட்ட கல்வித்துறை

மூன்று ஆண்டுகளாக, லேப் - டாப் பெற்ற மாணவர்களின் ஜாதி, இருப்பிடவிவரங்களை, ஒரேநாளில் வழங்க அறிவுறுத்தியதால் மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் ஆண்டுதோறும்பள்ளிக் கல்வித்துறை பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் - டாப் வழங்குகிறது. 

மாநில பள்ளி கல்வித்துறை, அனைத்து முதன் மை கல்வி அலுவலகங்களுக்கும், லேப் - டாப் பெற்ற பிளஸ் 2 மாணவ -மாணவர்களின் ஜாதி, வயது, இருப்பிட விவரங்களை உடனடியாக வழங்கும்படி உத்தரவிட்டது. பள்ளி கல்வித்துறையின் இந்த திடீர் உத்தரவால் விவரங்களை சேகரிக்க முடியாமல் ஊழியர்கள் தவித்தனர்.

அதேபோல் 2011 முதல் 2014 வரையிலான விவரங்களை உடனடியாக வழங்கும்படி அறிவுறுத்தியதால், தினசரி பணிகளோடு இதை முடிக்க முடியாமலும் காலதாமதம் ஏற்பட்டது.இதை கண்டுகொள்ளாத மாநில கல்வித்துறை தொடர்ந்து 'போன், பேக்ஸ், இணையத்தளம் வாயிலாக உடனே விவரங்களை அனுப்ப கோரியதால் அந்தந்த முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள், காலஅவகாசம் தராததால் அதிருப்தியடைந்தனர். மூத்த கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: காலாண்டு தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் சரிபார்ப்பு, மதிப்பீட்டுப் பணிகள் நடக்கின்றன.



இந்தப் பணிகளோடு மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. வேலைப்பளு அதிகரிக்கும் சூழ்நிலையில் ஒரே நாளில் பள்ளி கல்வித்துறை, 4 கல்வி ஆண்டுகளுக்கான 'லேப் - டாப்' பெற்ற மாணவ, - மாணவியரின் விவரங்களை உடனுக்குடன் கேட்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. மாநில பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் கால அவகாசம் வழங்கி விவரங்களைபெற முன் வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக