பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தனித்திறன் போட்டிகள், ராமநாதபுரத்தில் நவ., 12ல் நடக்கிறது.
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் உள்ள தனித்திறனை கண்டறிந்து அதை மேம்படுத்திடும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும்தனித்திறன் போட்டிகள் நடத்த பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் ௧௦ம் வகுப்பை ஒரு பிரிவாகவும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஒரு பிரிவாகவும் நடத்தப்படும்.அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில், பேச்சு, கட்டுரை, கவிதை புனைதல், வினாடி- - வினா, இசை, பரத நாட்டியம், கிராமிய நடனம், வாத்தியக் கருவிகளை இசைத்தல், ஓவியம் வரைதல் போன்றவற்றில் அக்., 13ல் கல்வி மாவட்ட அளவிலும், அக்., 30ல் வருவாய் மாவட்ட அளவிலும், நவ., 12ல் ராமநாதபுரத்தில், மாநில அளவிலும் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அனைத்து நிலைகளிலும், முதல் மூன்று இடங்களைப் பெறும்மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''இப்போட்டிகளுக்காக, 67 கல்வி மாவட்டங்களுக்கு 4,02,000 ரூபாய், 32 வருவாய் மாவட்டங்களுக்கு, 3,84,000 ரூபாய், மாநில அளவில், 3,00,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்குதல் போன்றவற்றிக்காக பெற்றோர், ஆசிரியர் சங்க நிதியில் இருந்து செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக