லேபிள்கள்

8.10.15

தென் மாவட்டங்களில் மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம் குறைந்துள்ளது: இணை இயக்குநர் தகவல்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் நடவடிக்கைகளால் தென் மாவட்டங்களில் மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம் பெருமளவில் குறைந்துள்ளது என்று அந்த இயக்கத்தின் இணை இயக்குநர் சு.நாகராஜமுருகன் தெரிவித்தார்.

 அனைவருக்கும் கல்வி இயக்கம்-தொடக்கக்கல்வித் துறை இணைந்து நடத்திய மண்டல அளவிலான மீளாய்வுக் கூட்டம் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அவர் மேலும் கூறியதாவது: 
 அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் நடவடிக்கைகளால் தென் மாவட்டங்களில் மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம் பெருமளவில் குறைந்துள்ளது. மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை ஆராய்ந்து, மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடரும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதன் ஒரு பகுதியாக மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் திண்டுக்கல், பழநி போன்ற பகுதிகளில் மலைவாழ் மக்கள் தங்கியுள்ள பகுதிகளில் உண்டு உறைவிட பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
 தொடக்கக்கல்வித் துறையின் இணை இயக்குநர் சி.செல்வராஜ் கூறியதாவது:
 பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளை தரவரிசைப்படுத்தி, அதன் தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளோம். இதன்மூலம் அவர்கள் மேலும் சிறப்பாக செயல்பட இந்த மீளாய்வுக் கூட்டம் உதவியாக இருக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக