தொடர் மழை எதிரொலியாக, பள்ளி மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தலைமையிடத்தில் தங்கியிருக்க வேண்டும்' என, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, மாநில தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அருகில் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகள் இருந்தால், அதன் அருகில் மாணவ, மாணவியர் செல்லாத வகையில் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். உணவு இடைவேளை, காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவியரின் வருகை எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மின் கசிவு ஏற்பாடாத வகையில் பராமரிக்க வேண்டும். பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி, கழிப்பறை ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், குடிநீரை காய்ச்சி குடிக்க வலியுறுத்தல் வேண்டும். பருவ மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், அவர்களின் தலைமையிடத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக