தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க உறுப்பினர்கள், ஒரு நாள் ஊதியத்தை, மழை நிவாரணப் பணிக்கு வழங்க முன்வந்துள்ளனர்.
இது குறித்து, சங்கத் தலைவர் கணேசன் கூறும்போது, ''எங்கள் சங்கத்தில், 2.24 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் ஒரு நாள் ஊதியத்தை, நிவாரணப் பணிக்காக பிடித்தம் செய்யும் படி, அரசிடம் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.அதேபோல், அரசு அலுவலர் ஒன்றிய சங்கத் தலைவர் சண்முகராஜனும், சங்கத்தில் உள்ள, நான்கு லட்சம் உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க சம்மதம் தெரிவித்து, அரசுக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக