நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என சுப்ரீம்
கோர்ட்டு உறுதிபட தெரிவித்தது. தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என்று அனில் ஆர்.தவே தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு கடந்த 11-ந் தேதி உத்தரவிட்டது. இந்த ஆண்டே நுழைவுத்தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டு சங்கல்ப் அறக்கட்டளை தொடுத்த ‘ரிட்’ வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. 2 கட்டங்கள் அந்த அமர்வு, நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) 2 கட்டங்களாக மே 1-ந்தேதியும், ஜூலை 24-ந்தேதியும் சி.பி.எஸ்.இ., நடத்த உத்தரவிட்டது. தேர்வு முடிவுகளை ஆகஸ்டு 17-ந்தேதி வெளியிடவேண்டும்; செப்டம்பர் 30-ந்தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்றும் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) பிறப்பித்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த பொது நுழைவுத்தேர்வால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கிராமப்புற மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகிற நிலை உருவாகி உள்ளது. மாற்றம் கேட்ட மத்திய அரசு இந்த நிலையில் 2016-17 கல்வி ஆண்டில் மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் தனித்தனியே நுழைவுத்தேர்வு நடத்த அனுமதிக்கும் வகையில், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றங்கள் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நேற்று முறையிட்டது. இது தொடர்பாக நீதிபதிகள் அனில் ஆர். தவே, ஏ.கே.கோயல் ஆகியோர் முன்னிலையில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜரானார். அப்போது அவர் கூறியதாவது:- நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) மே 1-ந் தேதியும், ஜூலை 24-ந் தேதியும் 2 கட்டங்களாக நடத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு நேற்று (நேற்றுமுன்தினம்) உத்தரவிட்டது. ஆனால் அதில் சில நியாயமான சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது. அந்த உத்தரவில் சில மாற்றங்கள் தேவை. ஏராளமான மாணவர்கள் மாநில மொழிகளில் படித்தவர்கள். அவர்கள் ஆங்கிலத்தில் போதிய திறமை வாய்ந்தவர்கள் அல்ல. அவர்கள் மே 1-ந் தேதி தேசிய தகுதி தேர்வை எழுத மிகவும் சிரமப்படுவார்கள். எனவே மே 1-ந் தேதி நடத்த வேண்டிய நுழைவுத் தேர்வை ரத்து செய்து விடலாம். ஜூலை 24-ந் தேதி எல்லா மாணவர்களும் ஒரே நுழைவுத்தேர்வை எழுத அனுமதிக்கலாம். எனவே மாற்றங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார். திட்டமிட்டபடி நடைபெறும் ஆனால் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் ஒரே அமர்வில் இல்லை என்பதால் பின்னர் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். மேலும் என்னென்ன நிவாரணம் வேண்டுமோ, அதைக் குறிப்பிட்டு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்தும் மற்றவர்களும் மனு தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர். அத்துடன் ஏற்கனவே அறிவித்தபடி மே 1-ந் தேதி மற்றும் ஜூலை 24-ந் தேதி தேசிய தகுதி நுழைவுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என நீதிபதிகள் உறுதிபட தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக