மாணவர்களின் விவரங்களை புதுப்பிக்கும் பணிகளுக்கான சுற்றறிக்கை அனுப்புவதில், கல்வித்துறை அலட்சியம் காட்டி வருவதால், பள்ளி நிர்வாகத்தினர் பணிச்சுமைக்கு ஆளாகின்றனர்.
மாணவர்களின் விவரங்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் தொடர்பாக, பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்புகிறது. தகவல்களை அனுப்ப, குறுகிய நாட்கள் மட்டுமே உள்ள இடைவெளியில் தான் அவை பள்ளிகளைச் சென்றடைகின்றன. இதனால், அத்தகவல்களை முழுமையாக சேகரிக்க முடியாமல் போகிறது. சில நேரங்களில் தகவல்களை சரிபார்க்க ஒரு நாள் அவகாச இடைவெளியில் அனுப்பப்படும்.
இதனால், விவரங்களை முழுமையாக சேகரிக்காமலும் அனுப்பி விடும் சூழலும் ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் பள்ளி கல்வி இணையதளத்தில், மாணவர்களின் விவரங்களை புதுப்பித்து அனுப்பும்படி மாவட்ட கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. விவரங்களை புதுப்பித்து அனுப்ப, இறுதிநாள் 20ம் தேதி என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்து ஆசிரியர்கள் குழப்பமடைந்தனர். இருப்பினும், விவரங்களை நேற்றுமுன்தினம் மாலைக்குள் அனுப்ப திட்டமிட்டனர். அதற்கும் வழியின்றி, மேலாண்மை இணையதள சர்வர் முடங்கியிருந்தது.
சுற்றறிக்கை அனுப்புவதிலும், அதில் குறிப்பிடப்படும் தகவல்களும் தெளிவானதாக இல்லாததால், ஆசிரியர்கள் பணிச்சுமைக்கு மட்டுமின்றி என்ன செய்வதென்று தெரியாமல் மனஉளைச்சலுக்கும் ஆளாவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக