லேபிள்கள்

29.4.16

இ.பி.எப் வட்டி விகிதம் 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்வு

கடந்த 2015-16-ஆம் நிதியாண்டுக்கான பி.எஃப். தொகைக்கு 8.8 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்று,
மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான மத்திய வாரியக் குழு (சிபிடி), கடந்த பிப்ரவரியில் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதற்கு மாறாக, அந்த பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டியை மட்டும் வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சம் சில நாள்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடு முழுவதும் தொழிற்சங்கள்  எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு, இபிஎப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித்தொகையை 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக