லேபிள்கள்

10.5.16

கட்டணம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் 10 மொழிகளில் 500 படிப்புகள்; பாராளுமன்றத்தில் மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

புதுடெல்லி, திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் 10 மொழிகளில் 500 படிப்புகள் தொடர்பான
பாடங்களை இந்த ஆண்டு முதல் தொடங்கி நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த பாடங்களை படிப்பதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என்றும் பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். ஆன்லைன் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் இந்த பாடங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் பொது அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக