புதுடெல்லி,மருத்துவ படிப்புக்கு மாணவர்களை சேர்க்க மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பொது நுழைவுத் தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவபடிப்புக்களுக்கு மாணவர்களை சேர்க்க ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை(என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த 11-ந் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழகம், உத்தர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி கூட்டமைப்புக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
இந்த நிலையில், 2016-2017-ம் கல்வி ஆண்டில் மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் தனித்தனியே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்கும் வகையில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றங்கள் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு முறையிட்டது.
முதல் கட்டமாக நடந்தது
இது குறித்து பின்னர் விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், ஏற்கனவே அறிவித்தபடி மே 1-ந் தேதி, ஜூலை 24-ந் தேதி என இரு கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டனர். அதன்படி சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) சார்பில் முதற்கட்ட நுழைவுத் தேர்வு கடந்த 1-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த பொது நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவர் என்பதால் இதற்கு பதிலாக மாநிலங்களே சொந்தமாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கவேண்டும் என்றும், பொது நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கவேண்டும் எனக்கோரி காஷ்மீர், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சார்பிலும் சில தனியார் மருத்துவ கல்லூரி அமைப்புகள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் நடைபெற்றது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் தனது வாதத்தில், மாநில அரசு நடத்தும் நுழைவுத் தேர்வு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொதுவான தேர்வாக இருந்தால் அதனை இந்த ஆண்டு அனுமதிக்கலாம் என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொது நுழைவுத்தேர்வை இந்தி மற்றும் ஆங்கில மொழிகளுடன் சேர்த்து தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி, உருது ஆகிய 7 மொழிகளிலும் நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
மருத்துவ கவுன்சில் வக்கீல்
இதற்கு பதில் அளித்த மருத்துவ கவுன்சில் வக்கீல் விகாஸ் சிங், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும், அரசு ஒதுக்கீட்டுக்கு மட்டுமே இந்த ஆண்டு விலக்கு அளிக்கலாம் என்றும், அதே நேரத்தில் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத் தேர்வைத்தான் பின்பற்ற வேண்டும் என்றும், ஆங்கிலம், இந்தி தவிர்த்து மற்ற பிரதேச மொழிகளில் தேர்வு நடத்துவது என்பது இயலாத காரியம் என்றும் கூறினார்.
சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் வாதாடுகையில், மாநில மொழிகளில் தேர்வு நடத்துவது நடைமுறையில் கடினம் என்றாலும் கூட, இது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று தெரிவித்தார்.
தமிழக அரசு கோரிக்கை
தனியார் கல்லூரிகள் சார்பாக ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான் தன்னுடைய வாதத்தில், பொது நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் சி.பி.எஸ்.இ. இடையே முரண்பாடான கருத்துகள் இருப்பதால் தற்போது அவசர உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்றும், வழக்கை தீர விசாரித்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது பற்றி பின்னர் முடிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.பி.ராவ் தன்னுடைய வாதத்தின் போது, ஏற்கனவே 2007-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தை 2011-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டும் அங்கீகரித்து இருப்பதாகவும், ஆகவே இந்த ஆண்டும் பழைய நடைமுறையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதேபோன்று புதுச்சேரி சார்பிலும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மாநில அரசுகள் நடத்த முடியாது
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தனியாக நுழைவுத்தேர்வு நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்து மனுக்களை தள்ளுபடி செய்து இடைக்கால உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க மாநில அரசுகளோ அல்லது கல்லூரிகளோ தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது.
* அனைத்து மாநிலங்களும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வையே பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
* மே 1-ந் தேதியன்று நடைபெற்ற நுழைவுத்தேர்வில் பங்கு கொள்ளாதவர்கள், 2-வது கட்டமாக நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
அனுமதிக்கப்படுவார்கள்
* ஏற்கனவே மே 1-ந் தேதியன்று நடைபெற்ற தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் விரும்பினால், ஜூலை 24-ந் தேதியன்று நடைபெற இருக்கும் நுழைவுத் தேர்விலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அப்படி அந்த தேர்வை எழுதும் போது, அவர்கள் ஏற்கனவே மே 1-ந் தேதியன்று எழுதிய தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
* தேவைப்பட்டால் மத்திய அரசும், சி.பி.எஸ்.இ.யும் 2-வது கட்ட நுழைவுத்தேர்வு தேதியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இடஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படாது
* இந்த உத்தரவின் மூலம் இடஒதுக்கீடு முறையில் எந்த மாற்றமும் ஏற்படாது.
மேலும் தேர்வு முறையின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அமைத்த முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மேற்பார்வை குழுவின் கண்காணிப்பில் இந்த தேசிய பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் கூறி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக