லேபிள்கள்

10.5.16

ஏஐசிடிஇ அங்கீகாரம் இல்லாத தனியார் சுயநிதிபாலிடெக்னிக் கல்லூரிகள் சேர்க்கை கூடாது !

ஏஐசிடிஇ அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத தனியார் சுயநிதிபாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


           இது தொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் 
எஸ்.மதுமதி அனைத்து தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில்,

''பொறியியல் பாடத்தில் டிப்ளமா படிப்புகள் வழங்கும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் 2016-17-ம் கல்வி ஆண்டுக்கு அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரத்தை பெற்றிருந்தால் மட்டுமே இந்த கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.

2016-17-ம் கல்வி ஆண்டுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை என்றால் முதல் ஆண்டில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாமல் மாணவர்கள் சேர்க்கப்பட்டால் அந்த மாணவர் சேர்க்கைக்கு கண்டிப்பாக அனுமதி அளிக்கப்படாது. மேலும், செமஸ்டர் தேர்வுக்கு பதிவுசெய்யவும் அனுமதி வழங்கப்பட மாட்டாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக