எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, பல்வேறு பயிற்சிகளை அளிக்க, தனியார் நிறுவனங்களை,
மத்திய அரசு வரவேற்றுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, சுருக்கெழுத்து மற்றும் போட்டி தேர்வுகளுக்கு, தயாராவதற்கான
பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, பயிற்சி அளிப்பதற்கான நிறுவனங்களை, மத்திய அரசு, தகுதி அடிப்படையில் தேர்வு செய்து வருகிறது. பயற்சி பெற்ற ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள், இடவசதி உள்ள நிறுவனங்கள் மட்டுமே, இதில் பங்கேற்க முடியும்.
தேர்வு செய்யப்படும் பயற்சி நிறுவனங்கள், மாணவர்களுக்கு பொது அறிவு, ஆங்கிலம், கணிதத் திறன், சுருக்கெழுத்து, அடிப்படை கணினி பயிற்சிகளை வழங்க வேண்டும். ஒரு மாணவரின் பயிற்சிக்கு, 800 ரூபாய் வீதம், மத்திய அரசு நிதி வழங்கும்.
விருப்பமுள்ள பயற்சி நிறுவனங்கள், சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள, எஸ்.சி., - எஸ்.டி., பயிற்சி நிறுவனத்தில், இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். 'மேலும் விவரங்களுக்கு, 044 - 2461 5112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என, வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக