புதுடெல்லி,145 ஆண்டு கால பழமையான ஓய்வூதிய சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யாது என்று தெரிகிறது. அச்சட்டத்தில்
திருத்தம் செய்வது பற்றி பிரதமர் மோடி இறுதி முடிவு எடுப்பார்.
58 லட்சம் ஓய்வூதியர்கள்
நாடு முழுவதும் மத்திய அரசு ஓய்வூதியர்கள் சுமார் 58 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு 1871-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஓய்வூதிய சட்டப்படி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் ஜனாதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கும் இந்த சட்டப்படி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியத்தை எந்த கோர்ட்டு உத்தரவுப்படியும் பறிமுதல் செய்யவோ, முடக்கவோ முடியாது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
தற்போது, மிகப்பழமையான, நடைமுறையில் இல்லாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுபோல், 145 ஆண்டு கால பழமையான ஓய்வூதிய சட்டத்தையும் ரத்து செய்வது பற்றி பரிசீலிக்கப்பட்டு வந்தது.
யோசனை
இதுபற்றி ஆலோசனை நடத்த மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் சமீபத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில், ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்யலாமா? அல்லது அதன் உட்பிரிவுகளில் திருத்தம் செய்யலாமா? என்பது பற்றி பல்வேறு அமைச்சகங்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்ற நிதிச்சேவை துறையின் பிரதிநிதிகள், 1871-ம் ஆண்டு ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்யாமல், திருத்தம் செய்து, அதில் உள்ள நடைமுறைக்கு பொருந்தாத உட்பிரிவுகளை மட்டும் நீக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர். அந்த யோசனைக்கு உள்துறை, ரெயில்வே, தொழிலாளர் நலன், கிராமப்புற மேம்பாடு, ராணுவம், பணியாளர் நலன் ஆகிய அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்தனர்.
பிரதமர் முடிவு
அதையடுத்து, இந்த யோசனையை மத்திய பணியாளர் நலத்துறைக்கு பொறுப்பாளரான பிரதமர் நரேந்திர மோடியின் முன்வைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனவே, ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி அவர் இறுதி முடிவு எடுப்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், ரத்து செய்யப்பட உள்ள சட்டங்கள் பட்டியலில் இருந்து ஓய்வூதிய சட்டம் விடுவிக்கப்பட்டது. அதனால், அந்த சட்டம் ரத்து ஆகாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக