லேபிள்கள்

13.5.16

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 30-ஆம் தேதியும், முதலாமாண்டு தேர்வு ஜூலை 1-ஆம் தேதியும் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 


இத்தேர்வுகளுக்கான கால அட்டவணை பின்வருமாறு.
 

இரண்டாம் ஆண்டு அட்டவணை:

  • ஜூன் 30 (வியாழக்கிழமை)- இந்தியக் கல்வி முறை
  • ஜூலை 2 (சனிக்கிழமை) - கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்தலும் -2
  • ஜூலை 4 (திங்கட்கிழமை) - தமிழ் கற்பித்தல் மலையாளம் தெலுங்கு உருது கற்பித்தல் இளஞ்சிறார் கல்வி -2
  •  ஜூலை 8-ஆங்கிலம் கற்பித்தல்-2
  •  ஜூலை 11 திங்கள்கிழமை)-கணிதம் கற்பித்தல்-2
  •  ஜூலை 13 (புதன்கிழமை)-அறிவியல் கற்பித்தல்-2
  •  ஜூலை 15 (வெள்ளிக்கிழமை)-சமூக அறிவியல் கற்பித்தல் -2

 முதலாம் ஆண்டு
  •  ஜூலை 1 (வெள்ளிக்கிழமை)-கற்கும் குழந்தை
  •  ஜூலை 5 (செவ்வாய்க்கிழமை)-ஆங்கிலம் கற்பித்தல்-1
  •  ஜூலை 7 (வியாழக்கிழமை)-கற்றலை எளிதாக்குதலும் மற்றும் மேம்படுத்தலும் -1
  •  ஜூலை 9 (சனிக்கிழமை)- தமிழ் கற்பித்தல் மலையாளம் தெலுங்கு உருது கற்பித்தல் இளஞ்சிறார் கல்வி -1
  •  ஜூலை 12 (செவ்வாய்க்கிழமை)-கணிதம் கற்பித்தல்-1
  •  ஜூலை 14 (வியாழக்கிழமை)- அறிவியல் கற்பித்தல்-1
  •  ஜூலை 16 (சனிக்கிழமை)-சமூக அறிவியல் கற்பித்தல்-1.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக