லேபிள்கள்

14.5.16

அச்சுப் பிழைகளை பொருட்படுத்த வேண்டாம்: தேர்தல் கமிஷன்

சென்னை: 'ஓட்டளிக்க வரும் வாக்காளர்களின் அடையாள அட்டையில் உள்ள அச்சுப்பிழை, எழுத்து பிழையை பொருட்படுத்த வேண்டாம்'
என, தேர்தல் பணியாளர்களுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள அறிவுரைகள்: சட்டசபை தேர்தல், 16ல் நடக்கிறது. தேர்தல் கமிஷன் வழங்கிய, 'பூத் சிலிப்' அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காட்டி, வாக்காளர்கள் ஓட்டு போடலாம். இவை இல்லாவிட்டால், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு உட்பட, 11 வகையான புகைப்பட அடையாள அட்டைகளில் ஒன்றை பயன்படுத்தலாம். வாக்காளர் அடையாள அட்டையில், எழுத்துப்பிழை, அச்சுப்பிழை இருந்தால், அதை தேர்தல் பணியில் உள்ள ஊழியர்கள் பொருட்படுத்தக் கூடாது; ஓட்டுச்சாவடியில் குறிப்பிட்ட வாக்காளரின் பெயர் இருக்கும்போது, மாற்று தொகுதியில் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தால், அதையும் ஏற்க வேண்டும்; புகைப்படம் மாறி இருந்தால் மட்டுமே நிராகரிக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக