பிளஸ் 2 சிறப்பு துணைதேர்வுக்குநாளையும், நாளை மறுநாளும், 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து, 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அவர்கள், கடந்த மார்ச்சில் நடந்த, பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளி மாணவராகவோ அல்லது தனித்தேர்வராகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.ஏற்கனவே எழுதிய தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு விண்ணப்பித்தும் வருகை புரியாத, அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில், தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தேர்வர்கள், சென்னையில் மட்டுமே தேர்வெழுத இயலும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.அப்போது, தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தங்கள், 'ஹால் டிக்கெட்'டையும், பதிவுசெய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். அதற்கு உரிய கட்டணமும் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக