லேபிள்கள்

6.6.16

பள்ளிகளில் காலை உணவு திட்டம்

ஆரம்ப பள்ளியில் படிக்கும், 26 லட்சம் மாணவ, மாணவியருக்கு, காலை உணவு வழங்கப்பட உள்ளது. அதற்கு முன், 'சத்துணவு
அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்' என, சத்துணவு ஊழியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, சத்தான காலை சிற்றுண்டி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, 26 லட்சம் மாணவ, மாணவியருக்கு, வாரத்தில், ஐந்து நாட்கள் காலை உணவு வழங்கப்பட வேண்டும்.காலை, 8:30 மணிக்கு சிற்றுண்டி கொடுத்தால் தான், 9:00 மணிக்குள் மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல முடியும். எனவே, சிற்றுண்டி தயார் செய்ய, சத்துணவு ஊழியர்கள், காலை, 7:00 மணிக்கு வர வேண்டும்.இதை செயல்படுத்த போதிய பணியாளர்கள் இல்லை. ஏற்கனவே பணிச்சுமையாலும், ஊதிய பற்றாக்குறையாலும், சத்துணவு உதவியாளர்கள், சமையலர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்கள் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் கூறியதாவது:தமிழகத்தில், 15 மாவட்டங்களில், சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. 20 மாவட்டங்களுக்கு மேலாக, உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்கவில்லை. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, கூடுதல் பணியாளர் களையும் நியமிக்க வேண்டும்.இவ்வாறு வரதராஜன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக