லேபிள்கள்

11.6.16

அரசுப் பள்ளிகளில் மாதம் ஒரு முறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு: இணை இயக்குநர் அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தவேண்டும்
என பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் குப்புசாமி அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்வுகளில் 90 சதவீதத்துக்கும் கீழ் தேர்ச்சி சதவீதம்குறைந்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் குப்புசாமி பேசியது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைய தலைமை ஆசிரியர்களின் கவனக் குறைவு காரணமாக இருந்துள்ளது. 

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை வழிநடத்த வேண்டும்.9-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போதே அவர்களின் தன்மையை அறிந்து, அவர்களுக்குஏற்ப பயிற்சி அளிக்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தலைமை ஆசிரியர்கள் தங்களது தினப்பணியினை அட்டவணையிட்டு, அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும்.கட்டாயத்தின் பேரில் மாணவர்களையோ, ஆசிரியர்களையோ வழிநடத்துவதை தலைமை ஆசிரியர்கள் தவிர்த்திட வேண்டும். 

வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் மாதம் ஒருமுறை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என்றார்.இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக