லேபிள்கள்

7.6.16

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை.யில் ஆன்-லைனில் பதிவுகள் தொடக்கம்...!!

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோஃ)) தொலைநிலையில் கல்வி
பயில்வதற்கான ஆன்-லைனில் பதிவு செய்வது தொடங்கிவிட்டது.
இந்திரா காந்தி திறந்தநிலை
பல்கலைக்கழகம் மூலம் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டமேல்படிப்புகளை படிக்க முடியும்.
இதற்கான பதிவுகளை ஆன்-லைன் மூலம் மாணவர்கள் மேற்கொள்ள முடியும்.
இதுகுறித்து கேடிஎச்எம் கல்லூரியிலுள்ள இக்னோ மண்டல மைய ஒருங்கிணைப்பாளர் ஆர்.டி. தரேக்கர் கூறியதாவது: பி.எஸ்சி, எம்.ஏ., பி.ஏ, உள்ளிட்ட படிப்புகளை இங்கு பயில முடியும்.
சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி நாளாகும். மற்ற பட்டப்படிப்பு, இதரப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 17 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு http://www.ignou.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக