லேபிள்கள்

7.6.16

டான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட் 2016) ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை தற்போது டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
டான்செட் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் எம்பிஏ, எம்சிஏ, எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான்
ஆகிய படிப்புகளில் சேர்ந்துகொள்ள முடியும்.
இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்துக்குச் சென்று ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
இந்தத் தேர்வுகள் ஜூன் 11, 12-ம் தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.

இணையதளத்துக்குச் சென்று பெயர், ஐடி, பதிவு எண் போன்ற விவரங்களைக் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம்.
ஹால் டிக்கெட்டுகளை தவற விடுவோர் தங்களது டூப்ளிகேட் ஹால் டிக்கெட் காப்பியை ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வங்கியில் டி.டி.யாக எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
எம்பிஏ, எம்சிஏ தேர்வுகள் ஜூன் 11-ம் தேதியும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய தேர்வுகள் ஜூன் 12-ம் தேதியும் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக