லேபிள்கள்

30.7.16

2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாமல் தவிப்பு.

கட்டாய பணி நிரவலில்துாக்கியடிக்கப்பட்ட, 2 ஆயிரத்து400 ஆசிரியர்கள் கலந்தாய்வில்பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.

தமிழகத்தில், 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு, 2014 செப்டம்பரில் கடைசியாக நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு, பணி ஆணை வழங்கப்பட்டது. இதில், பணி அனுபவம் இல்லாத, இடைநிலை ஆசிரியர்களால், 2015ல் நடந்த கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை.அதே ஆண்டில், பணி நிரவலின்போது மாவட்டந்தோறும், ஒரு பாடத்துக்கு, 15 ஆசிரியர்கள் வீதம், 75 ஆசிரியர்கள் கட்டாய இடமாறுதலுக்கு உட்படுத்தப்பட்டனர்.இதன்படி, தமிழகம் முழுவதும், 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாத சூழல் உள்ளது.ஏனெனில், புதிய கலந்தாய்வுவிதிப்படி, 1.6.2016ல், ஓராண்டு பணி அனுபவம் பெற வேண்டும். பணிநிரவலில் இடமாறுதல் பெற்றஆசிரியர்களுக்கென பிரத்யேக உத்தரவும் இல்லை. இதனால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'பணி நிரவல் என்பது கட்டாய பணிமாறுதல்தான். இதில், பலர் சொந்த ஊரை விட்டு துாக்கியடிக்கப்பட்டு, இருஆண்டுகளாக கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.'கடந்தாண்டு வரை, பணி நிரவல் பெற்ற ஆசிரியர்கள், கலந்தாய்வில்பங்கேற்க எவ்வித தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டது.நடப்பாண்டில் பின்பற்றும் புதிய நடைமுறையால், சொந்த ஊருக்கே திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. அரசாணையில் தக்க திருத்தம் செய்ய வேண்டும்' என்றனர்.
கோவை முதன்மை கல்வி அலுவலர்அருள்முருகன் கூறுகையில்,''அரசாணை விதிப்படி, கலந்தாய்வு பணிகள் நடக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டால்,விண்ணப்பங்கள் பெறுவதில் சிக்கல் இல்லை,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக