லேபிள்கள்

27.7.16

இன்ஜி., துணை கவுன்சிலிங் : இன்று நேரில் விண்ணப்பம்

இன்ஜி., கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு லட்சம் இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங்குக்கு, இன்று நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.
இன்ஜி., கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொது கவுன்சிலிங், ஜூலை, 21ல் முடிந்தது; 84 ஆயிரத்து, 352 இடங்கள் நிரம்பின. 1,01,318 இடங்கள் காலியாக உள்ளன. 
ஜூலை, 23, 24ம் தேதிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது; இதில், 1,501 இடங்கள் நிரப்பின; 5,022 இடங்கள் காலியாக உள்ளன. இதன்படி, மொத்தம், 1,06,340 இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களை நிரப்ப, துணை கவுன்சிலிங், நாளை நடக்கிறது. அதில் பங்கேற்க, இன்று காலை, 9:00 மணி முதல், 5:30 மணி வரை, சென்னை அண்ணா பல்கலைக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. 'பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்; ஏற்கனவே கவுன்சிலிங்கில் பங்கேற்று இடஒதுக்கீடு பெற்ற வர்கள், இந்த கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் செயலர் இந்துமதி அறிவித்துள்ளார். கூடுதல் விவரங் களை, https://www.annauniv.edu/tnea2016/ என்ற இணையதளத்தில் காணலாம். ஆனால், அண்ணா பல்கலை விளம்பரத்தில், துணை கவுன்சிலிங்குக்கு நேரில் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடாததால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 எனவே, கூடுதலாக ஒரு நாள் அவகாசம் அளித்து, கவுன்சிலிங் தேதியில் நேரில் வந்தாலும் அவர்களை பதிவு செய்து, இடங்களை ஒதுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். துணை கவுன்சிலிங் நடக்கும் தகவலை, அனைத்து மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் சேரும் வகையில் வெளியிடாமல், வெறும் விளம்பர அறிவிப்பாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளதால், பல மாணவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடும் சூழல் உள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக